search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்லூர் ராஜூ"

    • பக்தர்கள் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    • தமிழக கவர்னரின் கருத்தை நான் ஆதரிக்கவில்லை.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோ சனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    10லட்சம் பேர் பார்த்து மகிழும் சித்திரை திருவிழா வில் இந்த ஆண்டு மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது. 5 பேர் உயிரி ழந்துள்ளனர். இதனை மனவருத்தத்தோடு சொல்கி றேன்.

    வைகை ஆற்றில் நிகழ்ந்த உயிரிழப்புக்கு அதிகாரிகளின் கவன குறைபாடே காரணம்.சித்திரை திருவிழா வரலாற்றில் இதுவரை துயர சம்பவங்கள் நடந்ததில்லை. தி.மு.க. ஆட்சியில் மட்டுமே இவ்வாறு நடக்கிறது. வைகை ஆற்றில் 250மீட்ட ருக்கு உட்பட்ட பகுதியில் 3பேர் மூழ்கி உயிரிழந்துள் ளனர்.

    மேலும் சமூக விரோதி களை கண்காணிக்க போலீ சார் தவறியதால் பல இடங்களில் செயின் பறிப்பு நடந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தண்ணீர் அதிகமாக வந்தபோது கூட உயிரிழப்பு இல்லை. தற்போது தான் உயிரிழப்பு கள் ஏற்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சியும், நிர்வாகமும், குளறுபடியும், குழப்பமுமாக உள்ளது.

    வருங்காலங்களில் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி களுக்கு வி.ஐ.பி. பாஸ் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பங்க ளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    ஆற்றுக்குள் இறங்கு பவர்களை காவல்துறை கண்டித்து எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும்.ஆற்றில் அழகர் மட்டும் தான் இறங்க வேண்டும். ஆனால் எல்லோரும் இறங்குகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் சாரம் கட்டி தனி வழியில் பக்தர்கள் சென்றனர். இப்போது அழகருக்கு முன்பாகவே பக்தர்களும் ஆற்றில் இறங்கிவிடுகிறார்கள்.

    தமிழக கவர்னரின் கருத்தை நான் ஆதரிக்க வில்லை. கவர்னரை திமுகவினர் விமர்சனம் செய்யும் போது அவர் எப்படி சும்மா இருப்பார்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
    • அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் இல்லை. இங்கு கடைகோடி தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும்.

    மதுரை:

    அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ புதிய உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைக்கின்ற இயக்கமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பிறகு 3-வது தலைமுறையாக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பொறுப்பேற்று கட்சியை வலுவோடும், பொலிவோடும் நடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் இல்லை. இங்கு கடைகோடி தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.. சாதாரண தொண்டன் கூட அமைச்சராக, முதலமைச்சராக உயர முடியும் என்பதற்கு அ.தி.மு.க.வே சாட்சியாகும்.

    எனவேதான் இந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்ற இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் வருகிறார்கள். மதுரை மாநகரில் கூடுதலாக லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம்.

    தி.மு.க. குடும்ப கட்சி. அங்கு உழைப்புக்கு மரியாதை இருக்காது. கருணாநிதியின் வாரிசு களுக்கு தான் பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கும். எனவே இளைஞர்கள் அ.தி.மு.க. பக்கம் அணிவகுத்து வர தொடங்கி விட்டனர்.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மீது அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக தி.மு.க. அரசு மருத்துவக் கல்லூரி கட்டியதில் முறைகேடு என்று பொய்யாக ஜோடித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

    மேலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் போன்றவற்றை நிறுத்தி விட்டனர். தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்து விட்டு தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்து பெண்களை தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது என செல்லூர் ராஜூ கருத்து
    • செல்லூர் ராஜூ தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது என அமர் பிரசாத் ரெட்டி பதில்

    சென்னை:

    பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.

    பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை, வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி. "இத்தனை நாட்கள் தெர்மோகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.க.வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது", என அமர் பிரசாத் ரெட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அத்துடன், செல்லூர் ராஜூ அமைச்சராக இருந்தபோது வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க, தெர்மோகோல் மிதக்கவிட்ட படத்தையும் அமர் பிரசாத் ரெட்டி பகிர்ந்துள்ளார்.

    • பாஜகவிலிருந்து விலகியவர்களை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
    • பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும் என செல்லூர் ராஜூ வலியுறுத்தல்

    சென்னை:

    பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.

    இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    எங்கள் கட்சியில் இருந்து சென்றவர்களை பாஜகவில் சேர்த்தபோது இனித்தது. இப்போது அங்கே இருந்து இங்கே வரும்போது கசக்கிறதா? பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது.

    கூட்டணி கட்சிகள் தோளில் ஏறி உட்கார்ந்து காதை கடிப்பதையெல்லாம் அதிமுக பொறுத்துக்கொண்டிருக்காது. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டார்கள்.

    இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

    • 33 வார்டுகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் இதுவரை எந்த ஒரு துரும்பையும் ஈரோட்டுக்கு கிள்ளி கூட போடவில்லை.
    • நூல் விலை உயர்வினால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகி விட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எந்த திட்டங்களும் நிறைவேற்றவில்லை. நமது ஆட்சியில் கொண்டு வந்த ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

    33 வார்டுகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் இதுவரை எந்த ஒரு துரும்பையும் ஈரோட்டுக்கு கிள்ளி கூட போடவில்லை. காரில் பவனி வருகிறார்கள்.

    சொத்து வரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் கட்டண வரி என பல்வேறு வரி உயர்வினாலும், விலைவாசி ஏற்றத்தாலும் மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். நூல் விலை உயர்வினால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

    விடியல் தருவேன் என கூறி மக்களை ஏமாற்றி 505 வாக்குறுதிகளை தந்து எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு மக்கள் இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தொகுதியெங்கும் தி.மு.க. காரர்கள் தான் உள்ளனர். கண்ணுக்கெட்டிய தூரம் காங்கிரஸ்காரர்களை காணவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்ஜிஆர் ஒரு தெய்வ பிறவி, அவர் சிலை மீது காவித்துண்டு போடுபவர்கள் மனித பிறவி அல்ல
    • இப்படிப்பட்ட ஈன பிறவிகள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம்.

    அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம், இந்த இயக்கத்தை தோற்றுவித்த எம்ஜிஆர், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு தெய்வ பிறவி. அவருடைய சிலையில் காவித்துண்டை போடுபவர்கள் மனித பிறவி அல்ல, ஒரு இழிவான பிறவி. எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்கு தெய்வமாக வாழ்ந்தவர் அவரை கொச்சைப்படுத்துவது இழிவான பிறவிகளுக்கு உரிய குணமாகும். காவிதுண்டை எங்கு போட வேண்டுமோ அங்கு போட வேண்டும். குங்குமத்தை நெற்றியில் தான் வைக்க வேண்டும்.

    அதை தரையில் போட்டு மிதிக்க கூடாது. அது போல நாடு போற்றும் மக்கள் தலைவரின் சிலைக்கு காவி துண்டு போட்டு கொச்சைப்படுத்துபவர்கள் இழிவான பிறவிகள். தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் இப்படி செயல் படுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இப்படிப்பட்ட ஈன பிறவிகள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பள்ளிகளுக்கு முன்பு போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது.
    • பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது குடிக்கின்றனர்.

    தமிழகத்தில் சொத்துவரி, பால் விலை மற்றும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க சார்பில் பரவை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு தலைமை தாங்கிய பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளதாவது:

    குஜராத்தை பொறுத்தவரை அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்கு சொந்த ஊர். எனவே அப்பகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். காசியில் தமிழ் பற்றி பேசியதால் அப்பகுதி தமிழர்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து வருகிற கட்சி. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும். அது பா.ஜ.க கையில்தான் உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

    கோவை செல்வராஜ் ஏற்கனவே காங்கிரசில் இருந்தார். பின்னர் இப்போது தி.மு.க.வில் சேர்ந்துள்ளார். அவர் அடிக்கடி கட்சி மாறுவார். அ.தி.மு.க.வில் இருந்து கட்சி மாறியவர்கள் கூட தி.மு.க.வில் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். தற்போது தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடவில்லை, எங்கு பார்த்தாலும் போதை ஆறு தான் ஓடுகிறது. ஒரு காலத்தில் பெரியவர்கள் மட்டுமே மது குடித்த நிலை இருந்தது.

    ஆனால் தற்போது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் மது குடிக்கின்றனர். பள்ளிகளுக்கு முன்பாக போதைப் பொருட்கள் தாராளமாக விற்கப்படுகிறது. இதை பார்க்கும் போதும், கேட்கும் போதும் வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மதுரை மக்கள் திரள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    • மேலும் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

    மதுரை

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு நாள் வருகிற 5-ந் தேதி கடை பிடிக்கப்படுகிறது. மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அன்றைய தினம் மவுன ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவை தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.துணை செயலாளர் வில்லா புரம் ராஜா முன்னிலை வைத்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு ஆலோ சனைகள் வழங்கி பேசிய தாவது-

    அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, முதியோர் உதவித்தொகை, என்று அனைத்து நலத்திட்டங்களை யும் ரத்து செய்துவிட்டு மு.க. ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை குறை கூற என்ன தகுதி இருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மின் கட்டணத்தை குறைப்போம் என்று சொன்ன அவர்கள் தற்போது ஆதாரை இணை யுங்கள் என்று பிரச்சினை யை திசை திருப்பு கிறார்கள்.

    மது கடையை மூடுவோம் என்றார்கள். ஆனால் டார்கெட் வைத்து மதுவை விற்பனை செய்கிறார்கள். தி.மு.க. எப்போதும் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.எனவே வருகிற பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி.

    புரட்சி தலைவியின் அவரது நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் வருகிற 5-ந் தேதி காலை கே.கே.நகரில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அன்று மாலை 4 மணி அளவில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து நேதாஜி ரோடு மேலமாசி வீதி வழியாக மேலமாசி வீதி-வடக்கு சந்திப்பு வரை ஊர்வலமாக வந்து புரட்சித்தலைவி அம்மாவு க்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்த உள்ளோம்

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மட்டுமல்ல. தி.மு.க. அரசால் பாதிக்கப்பட்ட மதுரை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தி.மு.க. அரசுக்கு சரியான பாடத்தை புகட்ட ஓரணியில் திரள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், கணேஷ்பிரபு, பரவை ராஜா, சோலை ராஜா, சண்முக வள்ளி, சுகந்திஅசோக், குமார், பாஸ்கரன், மாயத்தேவன், கே.வி.கே.கண்ணன், பார்த்திபன், பரமேஸ்வரன், கறிக்கடை முத்துகிருஷ்ணன், கலைச் செல்வம், புதூர் அபுதாகிர், ரமேஷ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வை பொறுத்தவரை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகிறார்.
    • அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சேருவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராபட்டி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து தமிழக மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளேன். என்னை உலகறிய செய்ய சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மதுரை மேற்கு தொகுதி மக்களுக்கு நானும் என் குடும்பமும் உயிர் உள்ள வரை சேவையாற்றுவோம்.

    மதுரை நகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. கொடிமங்கலம் பகுதியில் ரூ.17 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டதால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    தற்போது தேனூர் பகுதியில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைந்து பணியை செய்வதாக அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு சிறந்த மாலுமியாக கேப்டனாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளும் திறம்பட செயல்பட்டன. குறிப்பாக கூட்டுறவுத் துறையில் எவ்வித தவறும் இன்றி சிறப்பாக மக்களுக்கு சேவை செய்யப்பட்டன.

    நான் அமைச்சராக பொறுப்பு வகித்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை நேர்மையாக கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்தப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் குத்து வெட்டும் நடந்ததால் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவதையே கைவிட்டு விட்டார்.

    ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த உத்வேகம் காரணமாக இரண்டு முறை சிறப்பான முறையில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தினோம். கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டதால் 27 விருதுகளை பெற்றோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ரேஷன் கடைகளில் தரமான பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

    கொரோனா காலத்தில் கூட பொதுமக்களுக்கு நேர்மையான முறையில் தரமான பொருட்களை விநியோகம் செய்யப்பட்டன. தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆயிரம் பொய் சொல்லி திருமணத்தை நடத்த வேண்டும் என்பார்கள். ஆனால் லட்சக்கணக்கில் பொய் சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது.

    ஆனால் இந்த ஆட்சி மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இனி எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.-தி.மு.க. என்கிற திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைக்க முடியும்.

    இப்போது அ.தி.மு.க. என்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லி நோக்கி புறப்பட்டு விட்டது. இதை நம்பி ஏறினால் டெல்லி செல்வார்கள். இல்லாவிட்டால் வீட்டில் இருப்பார்கள். அ.தி.மு.க.வை பொருத்தவரை எங்களின் நம்பி வருபவர்களை கை தூக்கி விடுவோம்.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வை பின் தள்ளிவிட்டு பாரதிய ஜனதா ராட்சசன் ஆக வளர்ந்து வருவதாக தி.மு.க. மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது பாரதிய ஜனதா அரசு மீது துரைமுருகனுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை காட்டுகிறது.

    அ.தி.மு.க. என்றைக்கும் தமிழகத்தில் முதன்மையான இயக்கமாகும். தி.மு.க.வை ஓட ஓட விரட்டக்கூடிய லட்சக்கணக்கான ராணுவ படையை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது அன்றைய சூழ்நிலையை பொறுத்து அமையும். 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.

    கடந்து 2019 தேர்தலை வைத்து எதையும் கணிக்க கூடாது. தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு தேர்தலிலும் மாறக்கூடியது தான். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கும் என்பது அப்போது தான் தெரியும்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகிறார். அ.தி.மு.க.விலிருந்து சிலர் விலகி இருக்கிறார்கள். அவர்களும் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினால் தீர்வு கிடைக்கும்.

    அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சேருவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். அ.தி.மு.க.வை நம்பி வருகிற யாரையும் நாங்கள் கைவிட மாட்டோம். கை தூக்கி விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வங்கி பின்பற்றினாலே தற்போதைய அ.தி.மு.க. பொருளாளருக்குத்தான் தங்க கவசத்தை பெற உரிமை உள்ளது.
    • அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட தங்ககவசம் எந்த தனி நபருக்கும் சொந்தமானதல்ல.

    மதுரை:

    மாமன்னர்கள் மருது சகோதரர்களின், குருபூஜையை முன்னிட்டு, மதுரை ஸ்காட்ரோட்டில் உள்ள அவர்களது சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க. நிர்வாகிகளுடன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன்பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் மருது சகோதரர்கள். அவர்களுக்கு நினைவிடம் அமைத்து, அரசு விழாவாக அறிவித்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான்.

    அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தி வருகிறோம். அ.தி.மு.க.வைத்தவிர வேறு எந்த கட்சிக்கும் இந்த பெருமை இல்லை.

    பசும்பொன்னில் தேவருக்கு 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசம் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அப்போது அ.தி.மு.க. பொருளாளராக யார் இருக்கிறார்களோ, அவர்களே தங்க கவசத்தை பெற்று ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்தார்.

    2017-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் பிரச்சினை ஏற்பட்ட போது, நடுநிலையாக இருதரப்புக்கும் பிரச்சனையின்றி ராமநாதபுரம், மதுரை மாவட்ட கலெக்டர்களிடம் தங்க கவசத்தை வங்கி அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    அதுபோன்ற நிலை தற்போது இல்லை. இப்போது அ.தி.மு.க. பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார். பிற வங்கிகளில் அ.தி.மு.க. வங்கி கணக்குகளை பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தான் நிர்வாகித்து வருகிறார்.

    ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வங்கி பின்பற்றினாலே தற்போதைய அ.தி.மு.க. பொருளாளருக்குத்தான் தங்க கவசத்தை பெற உரிமை உள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட தங்ககவசம் எந்த தனி நபருக்கும் சொந்தமானதல்ல. தற்போது தங்க கவசத்தை யார் பெறுவது என்பது குறித்து வழக்கு, மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நாளை (26-ந்தேதி) நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஐகோர்ட்டு உத்தரவுபடி செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது.
    • புதுமைப் பெண் திட்டத்தில் அனைத்து மாணவிகளுக்கும் நிதி உதவி வேண்டும்.

    மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளதாவது:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை எம்.எல்.ஏ.க்கள் தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டு உள்ளார். அதன்படி நான் வழங்கியுள்ள கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

    மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு தாலிக்கு தங்கம், ரூ.50 ஆயிரம் நிதி உதவி என ரூ.1 லட்சம் வரை கிடைத்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டு, தற்போது புதுமைப் பெண் திட்டத்தை தி.மு.க. அரசு தொடங்கி உள்ளது.

    ஆனால் இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் தான் கிடைக்கிறது. அதுவும் மதுரை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் வெறும் 538 மாணவிகள் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறைந்த எண்ணிக்கை. எனவே தகுதியான மாணவிகள் அனைவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்க வேண்டும்.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதலமைச்சர். நீதிமன்றம் உத்தரவுப்படி ஒரு கட்சியை நடத்த முடியாது. நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும், எடப்பாடி பழனிசாமி தான் (அதிமுக) பொதுச்செயலாளர் என்று தொண்டர்கள் முடிவு செய்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • 2.10 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்காவிட்டால் அ.தி.மு.க. போராட்டம் நடத்தும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.
    • தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்.

    மதுரை

    மதுரை அச்சம்பத்து புது குளத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுக ளாகியும் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது மிகப்பெரிய கோபத்தில் உள்ளனர். எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க தயா ராகி விட்டார்கள்.வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறுவது உறுதியா கிவிட்டது.

    மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் அதிக பணிகள் நடைபெற்றுள்ளன மீனாட்சியம்மன் கோவிலை சுற்றிய சித்திரை வீதிகள் மற்றும் பெரியார் பஸ் நிலையம், விளக்குத்தூண், மன்னர் திருமலை நாயக்கர் மஹால் ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நல்ல முறையில் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் மழை தண்ணீர் விரைவாக வடியும் நிலை உள்ளது.

    ஆனால் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆட்சியை குறை கூறுவதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.அவர் தொகுதி மக்களை சந்திக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு எதிராக பேசிவரும் நிதி அமைச்சரை எதுவும் பேச வேண்டாம் என்று தி.மு.க. மேலிடம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

    இலவச பஸ் பய ணத்திற்காக பஸ்சின் முன் பகுதி மட்டும் பிங்க் நிறத்தில் வர்ணம் பூசுகிறார்கள். மூதாட்டி மற்றும் பெண்கள் பஸ் ஏறுவதற்காக முன்பகுதியை சென்று பார்க்க முடியுமா?

    ஒவ்வொரு குடும்பத்த லைவிகளுக்கும் ரூ.1000 மாதந்தோறும் ஊக்கத்தொகை அளிப்போம் என்றார்கள்.ஆனால் இப்போது பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாக தெரி யவந்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள 2.10 கோடி குடும்ப தலைவிகளுக்கும் மாத ஊக்கத்தொகை ரூ.1000 வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அனுமதிபெற்று அ.தி.மு.க. தீவிர போராட்டத்தை நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×